செவ்வாய், 27 மே, 2014

வரவில்

காலார நடை போட 
 வலையோம் நான் வாரேன் 
 கை பிடித்து தடம்  காண   
 அலையே நீ வாராயோ ! 
 

புதன், 21 மே, 2014

அம்மா

 அம்மா
உன் பாடுகள் 
நான் அறிய 
என்  மகளாய்
வந்தாயோ !

செவ்வாய், 14 ஜனவரி, 2014

மலரட்டும் மானுடம்!

பெண்ணே!
வினைமாட்சி ஆடவர்க்கு
மனைமாட்சி பெண்டிர்க்கு
பண்டைத் தமிழகம் செய்த
பாகப்பிரிவிணை இது!
மாற்றா ஒழுக்கம்
மங்கையர்க்கு
போற்றா ஒழுக்கம்
மைந்தர்க்கு
சங்கம் மருவிய
காலச் சுவடுகள் இது!
உரிமையும் மதிப்பும் ஆணுக்கு
கடமையும் இழிவும் பெண்ணுக்கு
நடப்பியல் வாழ்வில்
சமூகம் கிழிக்கும்
லட்சுமணக் கோடு இது!
சமநிலைச் சமுதாயம் காண
மானுடம் தழைக்க
அறிவு, அறம்-எனும்
அரண்களால்
தடைகற்கள் உடைத்து
கையற்ற நிலை போக்கு!
மனித வரலாறு
மகளிர்க்கு ஈந்த
’மற்றும் பலர்’ தடை நீக்கு!
தகுதியைப் பெற
தரத்தை உயர்த்து!
சமூகப் போக்கில்
அரசியல் அரங்கில்
உலக நடப்பில்
எங்கெங்கு நோக்கினும்
நேர்நடை போடு!
பண்பு நிறை மனிதம் உருவாக
தன்னலமில்லாக் கடன் செய்!
சமூகத்தின் இரட்டை நியதி
மறையட்டும்!
மானுடம் மலரட்டும்!......
                                                          ---இராணி